பாதுகாப்பு அங்கிகள் அணிந்து பக்தர்கள் கச்சத்தீவு பயணம்..!

Published By: R. Kalaichelvan

15 Mar, 2019 | 12:36 PM
image

இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்வதற்காக, ராமேஸ்வரத்தில் இருந்து 2,453 பக்தர்கள் பாதுகாப்பு அங்கிகள் அணிந்து படகுகளில் புறப்பட்டுச் சென்றனர்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில், இந்தியா - இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர சிலுவைப்பாதை திருவிழா, ஆண்டு தோறும் இரண்டு நாட்கள் நடைபெறும்.

இந்த விழாவில், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று மாலை 5 மணிக்கு, நெடுந்தீவு பங்குதந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை வழிபாடு நடக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்க,ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை 65 விசைப் படகுகள் மற்றும் 15 நாட்டுப் படகுகளில் 415 பெண்கள் உட்பட மொத்தம் 2,453 பேர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து புறப்பட்டுச் சென்றனர். இவர்களை, ராமநாதபுரம் மாவட்ட ஆளுநர் வீரராகவ ராவ் வழியனுப்பி வைத்தார்.

கச்சத்தீவு திருவிழாவையொட்டி ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான 6 கப்பல்களும், சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான பெரிய கப்பல் ஒன்றும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

அத்துடன், கச்சத்தீவு பகுதி முழுவதும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17