பொல்கஹவெல, மெடலந்த பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்குறித்த சம்பம் இன்று இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியொன்றும் வேனொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்துள்ளதாகவும் குறித்த 6 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.