இலங்கைக்கும் மாலைதீவுக்குமான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் உயர் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

 சமகால அரசியல் களநிலவரங்கள், அரசியலமைப்பு தொடர்பான இன்றைய நிலை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதன் அவசியம் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை பொறுத்தவரை வழிநடத்தல் குழுவானது, நிபுணத்துவ குழுவின் அறிக்கையை பரிசீலித்துள்ளது. அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தம் விரைவில் சாத்தியப்படக் கூடியதாகத் தெரியவில்லை.

அத்துடன் இன்றுள்ள சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையே இல்லாதொழித்தல், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையில் மாற்றங்களை எற்படுத்தல் என்பன சர்ச்சைக்குரியனவாகவுள்ளன எனவும் இதன்போது ஹக்கீம் ஹன்ஸ்பீட்டர் மொக்கிற்கு எடுத்துரைத்துள்ளார்.