நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரியிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் தமீம் இக்பால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முஸ்பிகுர் ரஹும், நாங்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள், கிறிஸ்ட்சேர்சில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலிருந்து அல்லாஹ் எங்களை காப்பாற்றி விட்டார் என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சேர்சில் உள்ள மசூதியில் உள்ளோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த போது, நியூஸிலாந்துடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி வீரர்கள் மசூதியில் இருந்துள்ளனர். 

அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றுள்ளனர்.