செல்பி வீடியோ மூலம் மஹிந்த இலங்கை மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து (வீடியோ இணைப்பு)

Published By: Raam

14 Apr, 2016 | 02:09 PM
image

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் செல்பி வீடியோ மூலம் இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து வீடியோவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கூறியதாவது,இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியானதும் செழிப்புமிக்கதுமான புத்தாண்டு வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துவதாக, சிங்கள மக்களும் தமிழ் மக்களும், ஒரே சுப நேரத்தில் பாரம்பரிய புத்தாண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலம் இதுவாகும்.

புத்தாண்டென்பது, வடக்கு - தெற்கு ஒற்றுமையின் வருடாந்தக் கொண்டாட்டங்களென்பதோடு, இது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கும் குண்டுகளுக்கும் மத்தியிலும் கூட சிதைக்கப்பட்டிருக்கவில்லை.

வரும் ஆண்டில் செழிப்பும் நலனும் காணப்படும் நம்பிக்கையுடன், புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் விவசாயம், உணவுப் பாதுகாப்பு ஆகியன தொடர்பில் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தப் பண்டிகையின் அடிப்படையான விவசாயத் தொடர்புகளை நாம் மறக்கலாகாது, அது உணவு உற்பத்தி, தன்னிறைவு, துடிப்பான உள்நாட்டு விவசாயம் ஆகியன தொடர்பானது மாத்திரமே. எங்களுடைய பாரம்பரியங்கள் நிலைத்துநிற்பதை உறுதிசெய்வதற்கு, புத்தாண்டின் சடங்குகளையும் செயற்பாடுகளையும், இளைய சமுதாயத்திடம் பகிர்ந்துகொள்ளுதல், வளர்ந்தோரின் கடமையாகும்.

போரின்றி இந்தப் புத்தாண்டை நாம் கொண்டாடக்கூடியதாக இருப்பதற்கு, நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். 2009ஆம் ஆண்டின் சிங்கள - தமிழ் புத்தாண்டின்போது, பயங்கரவாதத்துக்கெதிரான போர், அதன் இறுதியானதும் முக்கியமானதுமான பகுதிக்குச் சென்றுவிட்டது. எமது இயற்கைத் தாயின் கொடைகளுக்காக புத்தாண்டில் நாம் எமது நன்றியறிதலைத் வெளிப்படுத்தும் அதேநேரத்தில், இந்த நாட்டுக்குச் சமாதானத்தைக் கொண்டுவந்த எமது போர்நாயகர்களையும் நாம் ஞாபகப்படுத்த வேண்டுமென நான் நம்புகிறேன்.

மகிழ்வானதும் செழிப்பானதுமான புத்தாண்டு வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09