வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி, சதொசா விற்பனை நிலையத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் புலனாய்வுப்பிரிவினருடன் இணைந்து போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, சந்தை சுற்றுவட்ட வீதியிலுள்ள சதொசா விற்பனை நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இருவரை சோதனைக்குட்படுத்தியபோதே ஒருவரிடமிருந்து 50 மில்லிக்கிராம் போதைப்பொருளும் மற்றையவரிடமிருந்து 30 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் அவர்களது உடமையிலிருந்து கைப்பற்றியுள்ளதாகவும் அருகிலுள்ள சிறைச்சாலைக்குள் இப்போதைப் பொருளினை வீசுவதற்காக இருவரும் சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இன்றைய தினம் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.