அருகாமை பாடசாலை – சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட 142 பாடசாலை தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்றது.

70 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களே இங்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண கலந்து கொண்டிருந்தார்.