(எம்.மனோசித்ரா)

தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக 43 இலட்சம் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைளைப் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமற்றது  என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், 

அதிபர், ஆசிரியர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, அதற்காக விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் இவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

எனவே அவர்கள் அது தொடர்பில் ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எமக்கு அறவிப்பார்கள். அதன் பின்னரே நாம் இவ்விடயம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என்றார்.