இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அளப்பரிய சேவையாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மஹாபொல துறைமுக மற்றும் கடல்சார் கல்லூரியில் இன்று அமைச்சர் சாகல ரத்னாயக்க தல‍ைமையில் நடைப்பெற்றது.

இலங்கை துறைமுக அதிகார சபையின் மனிதவளப் பிரிவின் மூலமாக அதிகார சபையின்  35 ஆம் ஆண்டு பூர்த்தியிலிருந்து ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக  தங்க நாணயங்கள் வழங்கப்படும் எனவும் இதன்போது அமைச்சர் சகால ரத்னாயக்க தெரிவித்தார்.