மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக கடும் வரட்சி நிழவி வருவதால் நீரோடைகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அனைத்தும் வற்றிபோய் உள்ளன.

இந்நிலையில்; மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர்மட்டமானது இன்று சுமார் 58 அடியால் குறைந்துள்ளது. மற்றும் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர்மட்டமானது 48 அடியால் குறைந்துள்ளது. எனவும் கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, மற்றும் மேல்கொத்மல ஆகிய நீர் தேக்கங்களில் நீரின் அளவும் குறைந்துள்ளது எனவும் லக்சபான நீர் மின் நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

என்றும் இல்லாதவாறு கடும் வரட்சி நிலவுவதால் மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புண்டு மேலும் இன்றைய நிலையில் மவுசாகலை நீர் தேக்கத்தில் உள்ள ஆலயங்களும் அதன் நிலப்பகுதிகள் மற்றும் நீர் தேக்கத்ததை  அன்டியபகுதிகளில் விசமிகாளால் தீவைக்கபடுகின்றன.

இது தொடரும் பட்சத்தில் நாட்டின் மின்துண்டிப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்