வவுனியாவில் நேற்று 2 வயயது சிறுவன்  தனது தாயுடன் வீதியில் சென்று கொண்டிருந்த பாதசாரிக்கடவையில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றான். 

2 வயயது சிறுவன் நேற்று தனது தாயுடன் வீதியில் சென்றபோது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள பாதசாரிக்கடவையை கடந்த சென்று கொண்டிருந்த போது அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி வேகமாகச் சென்ற பட்டா ரக வாகனம் தாயுடன் சென்ற சிறுவன் ஆகிய இருவரையும் மோதித்தள்ளியது. 

இவ்விபத்தில் படுகாயமடைந்த தாயும் சிறுவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்ற நிலையில். தாயார் விபத்துப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இவ்விபத்தை ஏற்படுத்திய சாரதியைக் கைது செய்துள்ள போக்குவரத்துப் பொலிஸார் இன்றைய தினம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் குறித்த சாரதியை 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.