தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விளையாடவுள்ள 16 வீரர்கள் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 16 போரடங்கிய இலங்கை குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அனுமதியளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் , 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு - 20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என இலங்கை அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரின் 4 போட்டிகளில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்று  ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் லிசித் மலிங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேரடங்கிய இலங்கை வீரர்களின் பெயர்கள் வருமாறு,

லசித் மலிங்க ( அணித் தலைவர் ), நிரோஷன் டிக்வெல்ல (உதவித் தலைவர் ), அவிஸ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்கிரம, குஷல் மெணடிஸ், அஞ்சலோ பெரேரா, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பிரியமல் பெரேரா,திஸர பெரேரா, சுரங்க லக்மால், இசுரு உதான, அசித பெர்னாண்டோ, அகில தனஞ்சய, ஜெப்ரி வெண்டர்சா, லக்ஷன் சந்தகன் ஆகியோர் இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.