(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளை கடந்தும் இன்னமும் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க முடியாத நிலைமை உள்ளதை எண்ணி அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இன்று சபையில் தெரிவித்தார். 

அத்துடன் விசேட செயலணி  ஒன்றினை அமைத்து அகதிகளாக வேறு நாடுகளில் வாழும் மக்களை வரவழைக்க வேண்டும் எனவும் விகிதாசார ரீதியில் தமிழர்களின் எண்ணிக்கை குறைக்க அகதிகளை வரவழைக்காது திட்டமிட்டு செயற்படுவதாகக்கூட இதனை கருத முடியும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.