மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் இன்று அதிகாலை 1.00 மணியளவில் திருடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

பொலிஸ் நிலையத்தின் ஆயுத வைப்பகத்தில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்றும் 05 கைத்துப்பாக்கிகளும் திருடப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.