கம்போடியாவை சேர்ந்த 91 வயதுடைய பௌத்த பிக்குவான சம்பிரான் நெட்  என்பவர் சிவனொளிபாதமலைக்கு சென்ற நிலையில் ஏற்பட்ட மார்பு வலியின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பௌத்த பிக்கு கடந்த 10 ஆம் திகதி சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்துவிட்டு வந்த நிலையில் ஏற்பட்ட திடீர் மார்பு வலியினால் அவர் நல்லதண்ணியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

இந்நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தனர். 

இந்நிலையில் உயிரிழந்த கம்போடிய பிக்குவின் உடலை கொழும்பிலுள்ள மலர்ச்சாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக பௌத்த பிக்குகள் தெரிவித்தனர்.