ஐந்தாவது ஒருநாள் போட்டியின் பின்னர் இலங்கைக்கு வருமாறு  இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க அழைக்கப்பட்டுள்ளார்  தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாடடுச்சபை  ரி20 போட்டிகளிற்கு ஸ்டீவ் ரிக்சன் பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவார் எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை அணியி;ன் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதற்காகவே  இலங்கைகிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா  தென்னாபிரிக்கா பயணமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன

ஐந்தாவது ஒருநாள் போட்டி முடிவடைந்த பின்னர் இருவரும்  இலங்கை திரும்பவுள்ளனர்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஹதுருசிங்க குறித்து பொறுமையிழந்து விட்டது என அதன் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்

தென்னாபிரிக்காவி;ற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகளில் இதுவரை நான்கில்  இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் உலக கிண்ணப்போட்டிகளிற்கு இன்னமும் மூன்று மாதங்கள்  உள்ள நிலையில் ஹதுருசிங்க அணியின் நிலையை மாற்றுவதற்கு என்ன திட்டம் வைத்துள்ளார் என கட்டுப்பாட்டுச்சபை அறியவிரும்புகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் புதிய தலைவர் சமி சில்வா ஹதுருசிங்கவை இனிமேலும் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை -ஒரு பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க தோல்வியடைந்துவிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்