ஐயப்பன் பெயரில் வாக்கு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க மாநில அரசு எடுத்த முடிவால் மாநிலமே போராட்டக்களமானது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதன் போது தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா தெரிவித்ததாவது,

 சபரிமலை என்பது மத வழிபாட்டு தலம். எனவே, கோவில் பெயரிலோ, மசூதி பெயரிலோ யாராவது வாக்கு கேட்டால், அது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.

ஐயப்பன் பெயரில் வாக்கு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். சபரிமலை பிரச்சினையை எந்த அளவுக்கு பிரசாரத்தில் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்வதில் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.