நடிகை ஜோதிகா நடிக்கும் படத்திற்கு ‘ராட்சசி’ என பெயரிடப்பட்டிருக்கிறது

திருமணத்திற்குப் பின் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களை தொடர்ந்து நடிகை ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராட்சசி’ என பெயரிடப்பட்டு இருக்கிறது.

 இந்தப் படத்தில் ஜோதிகாவுடன், பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், ஹரிஷ் பராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதில் ஜோதிகா அரசு பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியையாக நடித்திருக்கிறார். 

இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ் ராஜ்.‘ராட்சசி’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவு பெற்று, இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன, 

விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஜோதிகா தற்பொழுது ‘குலேபகாவலி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத திகில் கொமடி படத்தில் நடிகை ரேவதி உடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும், கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான காக்க காக்க என்ற படத்தில் தனியார் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியையாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.