ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து அமைக்கவுள்ள பரந்தளவிலான கூட்டணி தொடர்பான இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சியின் கொள்கைகளும் இதன்பொழுது முன்னிலைப்படுத்தப்பட்டது. பொதுஜன பெரமுனவின் கொள்கைகளும், சுதந்திர கட்சியின் கொள்கைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்றிணைக்கப்பட்ட கொள்கை திட்டம் உருவாக்கத்தில் இரண்டு கட்சிகளின் சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் செயற்பாடுகள் இதன்போது  வகுக்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட்டு முறையான பொருளாதாரத்தையும், அரசியல்  செயலொழுங்குகளையும்  முன்னெடுப்பதற்காகவே பரந்துப்பட்ட கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

ஆகவே கூட்டணியின் தலைமைத்துவம் எவருக்கு, பொதுச்செயலாளர் யார, கூட்டணியின் பொதுச்சின்னம் என்பவை தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களும் தற்போது  எடுக்கப்படவில்லை விரைவில்  முழுயைன பரந்துப்பட்ட கூட்டணி அமைக்கப்படும்  என்றார்.

அத்துடன் இந்த சந்திப்பு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.