“இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன வரலாற்று ரீதியாக வேரூன்றிய வலுவான கலாசார பாரம்பரியங்கள் மற்றும் உறவுகளை உயர்ந்த உடைமைகளாகப் பெற்றிருக்கின்றன. இருநாட்டு மக்களினதும் பரஸ்பர அன்பு இவ்விஸேட உறவிற்கு அடிதளமாகவிருக்கின்றது.
உலகத்திலே அமைதி மற்றும் சமாதானத்தினை ஊக்குவிக்கின்ற பௌத்தம் மற்றும் இஸ்லாத்தின் நிலைபேறுடைய ஒழுக்கக் கோட்பாடுகளின் பொதுத்தன்மையினால் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுப்பெறுகின்றன.”
இலங்கை மற்றும் பாகிஸ்தானிற்கிடையிலான பௌத்த, காந்தாரா நாகரீகம்: “கலாசார இணைப்பு” என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கில் உரைநிகழ்திய போது இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கு ஹோமாகமவில் அமைந்துள்ள இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் ஓய்வுபெற்ற படை வகுப்புத் தலைவர் (பிரிகேடியர்) அகஹா அஹ்மத் குல், ஆசிய நாகரீகங்களிற்கான தக்ஷில்லா நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி கஹனி உர் ரஹ்மான், ஜெர்மனியின் மெய்ன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி ஹக் வன் ஸ்கைஹாக், சீனாவின் திசிங்ஹா பல்கலைக்கழக தொடர்பாடலிற்கான சர்வதேச நிலையத்தின்; பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி லீ சிங்வுஹாங், பாகிஸ்தானிய உயர் கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற படை வகுப்புத் தலைவர் (பிரிகேடியர்) கலாநிதி சப்தார் அலிஹ் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சங்கைக்குரிய சிரே~;ட பேராசிரியர் கலாநிதி கல்லேல்ல சுமனசிறி தேரர் ஆகிய தலைசிறந்த அறிஞர்கள் இக்கருத்தங்கிலே பிரதான பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் உரையாற்றிய பிரிகேடியர் அகஹா அஹ்மத் குல், காந்தாரா நாகரீகத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் அதன் கலாசார வரலாற்று செல்வாக்கு தொடர்பாக விளக்கமளித்தார்.
பேராசிரியர் கலாநிதி கஹனி உர் ரஹ்மான் தனது உரையிலே ஐந்தாம் நூற்றாண்டு காலப்பகுதியிலே தழைத்தோங்கிய பௌத்த காந்தார பாகிஸ்தானின் அத்தியாயங்களிலே மிகபிரகாசமானது என கூறினார்.
பேராசிரியர் கலாநிதி ஹக் வன் ஸ்கைஹாக் உரையாற்றுகையில் காந்தாரா கலைகளின் பல்வேறு சிலைகள் மற்றும் பீடங்கள் குறித்து தகவலளித்தார். “பாஸ்டிங் சித்தார்த்த”(fasting Siddhārtha) என்பது காந்தாராவில் காணப்படும் ஏனைய கலை வேலைப்பாடுகளுக்கு மத்தியில் மிகவும் பிரசித்தமானதென புகழ்ந்துரைத்தார்.
பாசியன் (Faxian) சுங் யுன் (Song Yun) சிங்சாங் (Xuanzang) ஹியுசே (Huichao) மற்றும் உகொங் (Wukong) முறையே 5ம்,6ம்,7ம்,8ம் நூற்றாண்;டுகளில் வாழ்ந்த ஐந்து சீன யாத்திரீகர்கள் உத்யான (Uddiyana-- பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு) தொடர்பாக எழுதியிருந்த பயணக்குறிப்புக்களை பேராசிரியர் லீ சிங்வுஹாங் தனது உரையின் பொழுது பகிர்ந்து கொண்டார். சீன பௌத்தத்தில் உத்யான என்பது பேரரசர் ஜேட் மற்றும் அழிவற்றவர்கள் வாழ்ந்த மேற்கு சொர்க்கத்துடன் அடையாளப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடதக்கது என கூறினார்
கலாநிதி சப்தர் அலிஹ் பாகிஸ்தான் அரசினால் நன்கு பாதுகாக்கப்படுகின்ற பௌத்த பாரம்பரியம் உள்ளடங்களாக தூபிகள், புகழ்ப்பெற்ற மடங்கள் மற்றும் காந்தாரா கலைகளின் மாதிரிகள் குறித்து விளக்கமளித்தார். புத்த மதம் அதன் பிறப்பிடத்திற்கு அப்பால் வியாபிக்க தொடங்கிய பொழுது காந்தாரா (பாகிஸ்தான்) மற்றும் செலான் (இலங்கை) ஆகிய இடங்களிலேதான் வேரூன்றியது என தெரிவித்தார். புத்த பெருமானின் புனித பண்டங்கள் இலங்கை உட்பட உலகின் ஏனைய தூபிகளுடன் இணைப்பினை கொண்டுள்ள காந்தாரா தூபிகளிலேதான் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் சங்கைக்குரிய சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி கல்லேல்ல தேரர் தனது உரையிலே இக்கருத்தரங்கிற்கு சமூகமளித்திருந்த விருந்தினர்களை அன்புடன் வரவேற்றார்.
பௌத்த தொல்பொருளியல் பொக்கிஷங்கள், தளங்கள் மற்றும் கலைப்பொருட்களை சிறந்த முறையில் பாதுகாத்து பராமரித்துவரும் பாகிஸ்தானிய அரசாங்கத்திற்கு தனது நன்றியினை அவர் தெரிவித்தார். மேலும் இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்திலே இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்தமையினை வெகுவாக பாராட்டினார்.
பாகிஸ்தானிய அரசு இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பனியகத்தின் ஊடாக இலங்கை மாணவர்களுக்கு ஆயிரம் (1000) முழுமையான நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில்களை பல்வேறு துறைகளில் வழங்கவிருக்கின்றதுடன், மாணவர் மற்றும் ஆசிரியர் பறிமாற்ற நிகழ்வுகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் இந்நிகழ்வின் நிறைவிலே தெரிவித்தார்.
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார். பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகம் புலமைபரிசிலிற்கான ஆதரவு மற்றும் நுழைவுரிமை (விசா) வசதிகளை வழங்குமென உயர் ஸ்தானிகர் தனது உரையிலே தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM