தென்னாபிரிக்க அணியுடனான தொடரின் பின்னர் உலக கிண்ணப்போட்டிகளிற்கு முன்னதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளரையும் முகாமையாளரையும் மாற்றுவது குறித்து ஆராயப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரிகள் இது குறித்து  விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

விளையாட்டுத்துறை அமைச்சருடனான சந்திப்பின்போது தலைமைபயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளர் குறித்து நீண்டநேரம் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஐசிசி உலக கிண்ணப்போட்டிகளிற்கான அதிகாரிகள் நியமனம் குறித்து  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகளுடன் ஆராய்ந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்

தலைமைப்பயிற்றுவிப்பாளர் முகாமையாளர் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ள  ஹரீன்பெர்ணான்டோ எனினும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

நான் இது பற்றி கருத்துகூறமுடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் உலக கிண்ணப்போட்டிகளிற்கான திட்டமிடல்களில் இலங்கை கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ளார்