நடிகர் விஷாலும், ஆந்திராவை சேர்ந்த நடிகை அனிஷாவும் காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் வைத்து இம்மாதம் 16 ஆம் திகதி நடைபெற இருக்கிறது. 

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகே திருமணம் என தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகை அனிஷா ஆலா ரெட்டியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார். அன்றைய தினமே விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு  செய்தியை உறுதி செய்தார்.

பிரபல தொழிலதிபர் மகளான அனிஷா, அர்ஜூன் ரெட்டி உட்பட சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். சில மாதங்களாக விஷாலும், அனிஷாவும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்துவைக்க முடிவு எடுத்துள்ளனர்.