ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து அமைக்கவுள்ள பரந்தளவிலான கூட்டணி தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. 

எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

இந்த சந்திப்பில் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஜகத் வெல்லவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும், சுதந்திர கட்சி சார்பில் பேராசிரியர் றோஹண லக்ஷ்மன் பியதாச, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.