நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் உள்ள கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கட்டட இடிபாடுகளுக்கு பெருமளவான சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லாகோஸில் உள்ள பாடசாலை ஒன்றில் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்ந்தம் ஏற்பட்டுள்ளது.

நைஜீரிய நேரப்படி நேற்றுக் காலை 10.00 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சிறுவர்களில் சுமார் 40 பேரளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ஏனையோரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேஸிலின் சாயுபோலோவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. 

17 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் இருவர் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தாக்குதலின் பின்னர், அவர்கள் இருவரும் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.