(ஆர்.விதுஷா)

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் பாராளுமன்ற வளாகத்தில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

கொழும்பு கலைப்பீடத்திற் அருகில் பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு பாராளுமன்ற வளாகம் வரை சென்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 

மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டனர். இதன் போது அனைத்து  பல்கலைக்கழக  ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கைதுசெய்யப்பட்டார்.

பயங்கரவாத தடைசட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை  உருவாக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 4 ஆயிரம்  பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு  கலை பீடத்திலிருந்து பேரணியாக பாராளுமன்ற  வளாகத்திற்குள் செல்ல முற்பட்டனர். இதன் போது 'பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கு' , 'பங்கரவாத எதிர்ப்பு  சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் ' என்ற பதாகைகளை ஏந்திய  வண்ணமும் ,  கோஷங்களை  எழுப்பிய வாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.