டிஃப்ரஷன் எனப்படும் மனச்சோர்வுக்கு தற்போது எலக்ட்ரிகல் பிரைன் ஸ்டிமுலேசன் தெரபி எனப்படும் புதிய சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளதாக  வைத்திய நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இன்றைய திகதியில் பணிச்சுமையின் காரணமாகவும், சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும், கலப்பட உணவுகளை சாப்பிடுவதன் காரணமாகவும், உடற்பயிற்சி இல்லாத காரணத்திற்காகவும் என பல காரணங்களுக்காக எம்மில் பெரும்பாலானோர் கள் டிஃப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இவர்களுக்கு தற்பொழுது யோகா,தியானம், மூச்சு பயிற்சி, மனதை இயல்பாக வைத்துக் கொள்ளுங்கள் உடற்பயிற்சி, சத்தான உணவு, உற்சாகமான மன செயல்பாடு இவற்றையே நிவாரணமாகவும், சிகிச்சையாகவும் பரிந்துரைக்கப்படுகிறது. சிலருக்கு மட்டுமே மாத்திரைகள் வழங்கப்பட்டு நிவாரணம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டிஃப்ரஷன் எனப்படும் தீவிர மன சோர்வுக்கு ஆளாகும் நோயாளிகளை எலக்ட்ரிக்கல் க்ரைன் ஸ்டிமுலேசன் தெரபி என்ற நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் அளித்து குணப்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இத்தகைய சிகிச்சையின்போது மூளைக்குள் மனச் சோர்வை உருவாக்கும் பகுதிக்குள், சிறிய அளவிலான மின் அதிர்வுகள், கருவிகள் மூலம்  சிகிச்சையாக வழங்கப்பட்டு, மூளையின் இயக்கம் தூண்டப்படுகிறது. இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு மனச்சோர்வு பாதிப்புக்கு ஆளானவர்கள் முழுமையான நிவாரணம் பெற்று உற்சாகமான மனநிலையை திரும்பியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

டொக்டர் ராஜ்மோகன்

தொகுப்பு அனுஷா.