தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் இறுதித் தருணத்தில் இசுறு உதானவின் அதிரடி ஆட்டம் காரணமாக இலங்கை அணி 189 ஓட்டங்களை குவித்துள்ளது. 

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்டு தென்னாபிரிக்க அணி 3:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் நான்காவது போட்டி இன்று போர்ட் எலிசபெத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணியை பணித்தது.

அதன்படி முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்களும் தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சுகளுக்கு முகங்கொடுக்க முடியாது அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்படி அவிஷ்க பெர்னாண்டோ 29 ஓட்டத்துடனும், உபுல் தரங்க 4 ஓட்டத்துடனும், ஓசத பெர்னாண்டோ டக்கவுட் முறையிலும், குசல் மெண்டீஸ் 21 ஓட்டத்துடனும் பிரியாமல் பெரேரா டக்கவுட் முறையிலும், கமிந்து மெண்டீஸ் 9 ஓட்டத்துடனும், திஸர பெரேரா 12 ஓட்டத்துடனும், தனஞ்சய டிசில்வா 22 ஓட்டத்துடனும், லஷித் மலிங்க டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை  அணி 131 ஓட்டங்களுக்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.

இந் நிலையில் 10 ஆவது விக்கெட்டுக்காக இசுரு உதான மற்றும் கசூன் ராஜித ஜோடி சேர்ந்தாட ஆரம்பித்த போது 36 ஆவது ஓவருக்காக அன்ரிச் நொர்டே பந்துப் பரிமாற்றம் மேற்கொணடர். இந்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் இசுரு உதான எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். அதனால் இலங்கை அணி 150 ஓட்டங்களை கடந்ததுடன், இசுரு உதானவும் சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அந்த ஓவரில் மாத்திரம் இலங்கை அணி 23 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

தொடர்ந்தும் இசுரு உதான அதிரடியாக ஆட்டம் காட்ட இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. எனினும் 39.3 ஆவது பந்தில் 57 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டங்கள் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 78 ஓட்டங்களை பெற்ற இசுரு உதனா ஆட்டமிழந்தமையினால் இலங்கை அணி 189 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதனால் தென்னாபிரக்க அணிக்கு வெற்றியிலக்காக 190 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன் தொடர்ந்தும் இசுறு உதான ஆடுகளத்தில் அதிரடி காட்ட 

இதனால் இலங்கை அணி ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஓட்டங்களை மாத்திரம் பெற்ற, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் அன்ரிச் நொர்டே 3 விக்கெட்டுக்களையும், பெலக்கொய்யோ 2 விக்கெட்டுக்களையும், ஸ்டெய்ன், லுங்கி நிகிடி,  ஷம்ஷி மற்றும் ஜே.பி.டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.