இந்தோனேசியாவின் சுமாத்திராவில் தீவிரவாதியென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் மனைவியும் மகனும் குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்

தீவிரவாதியென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைதுசெய்யத பின்னர் சுமாத்திராவின் வடபகுதியில் உள்ள சிபொல்கா என்ற நகரில்  உள்ள அவரது வீட்டை காவல்துறையினரும் குண்டுசெயழ் இழக்கச்செய்யும் பிரிவினரும் முற்றுகையிட்டவேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் வீட்டை முற்றுகையிட்டவேளை வீட்டிற்குள் சந்தேகநபரின் மனைவியும் மகனும் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரும் மதத்தலைவர்களும் ஏனையவர்களும் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன்  அவர்களை சரணடையுமாறு கேட்டுக்கொண்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

12 மணிநேரம் இடம்பெற்ற முற்றுகையின் போது  சந்தேக நபரின்  மனைவி கைக்குண்டை வீசியதில் காவல்துறை அதிகாரியொருவர் உட்பட இருவர் காயமடைந்தனர் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்

இதன் பின்னர் சந்தேகநபரி;ன் மனைவியும் மகனும் தங்களை வெடிக்கவைத்து வீட்டிற்குள் இறந்துள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

குறிப்பிட்ட வீட்டில் 30 கிலோ வெடிகுண்டுகளை மீட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் சிறுவனின் வயது குறித்த விபரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.

கடந்த வருடம் மே மாதம் ஒன்பது வயது  சிறுவர்கள் உட்பட முழுக்குடும்பத்தவர்களும் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.