நாளை நாம் சொர்க்கத்தில் காணப்படுவோம் என, ஐ.எஸ். உறுப்பினராக அறியப்படும் அபு அப்த் அல்-அஸீம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு சிரியாவில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் தமது இறுதி இருப்பையும் இழந்துள்ள நிலையில் ஐ.எஸ். உறுப்பினரின் புதிய பிரசார காணொளி நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பிரசார காணொளியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

”எமக்கு எதிராக போராட உலகின் அனைத்து நாடுகளும் ஏன் கைக்கோர்த்துள்ளன?. நாம் இழைத்த குற்றம் என்ன?, எம் மீது இரவும் பகலுமாக ஏன குண்டு வீசப்படுகிறது. நாம் அல்லாஹ்வின் விதியை நடைமுறைப்படுத்தவே விரும்பினோம்.

எம் மீதான நடவடிக்கைகளும் அனைத்தும் கடவுளின் சித்தத்தின் பேரிலும், அவரது தீர்ப்பின்படியும் நடைபெறுகிறது. எனவே, நாம் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வெற்றியும், தோல்வியும் மண்ணுலக தீர்ப்பல்ல, பரலோக தீர்ப்பு.

கடவுளின் சித்தத்தின் பேரில் நாளை நாம் சொர்க்கத்தில் காணப்படுவோம். எமது இந்நிலைக்கு காரணமானவர்கள் நரகத்தில் எரிந்துக் கொண்டிருப்பர்” எனத் தெரிவித்துள்ளார்.