இந்திய விமானப்படையின் விமானி அபிநந்தனுடன் அரசியல்வாதிகள் எடுத்துக்கொண்ட ஒளிப்படங்களை அகற்றுமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில், அரசியல் தலைவர்கள் இந்திய விமானி அபிநந்தனுடன் எடுத்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

தேர்தல் நடத்தைகள் அமுலில் உள்ளதால், குறித்த ஒளிப்படங்கள் மூலம் அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடலாம் என கருதி, பேஸ்புக்கில் அபிநந்தன் அரசியல் தலைவர்களுடன் காணப்படும் ஒளிப்படங்களை அகற்ற குறித்த நிறுவனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று பஸ் தரிப்பிடங்களில் காணப்படும் அரசியல் தலைவர்களின் சிலைகள் அருகே அக்கட்சியின் கொடிகம்பங்களில் பறக்கும் கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.