பொள்ளாச்சி விவகாரம் : சந்தேகநபரொருவரின் தாயாரின் கருத்து

Published By: J.G.Stephan

13 Mar, 2019 | 04:53 PM
image

இந்தியா, தமிழகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் 200 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக கூறப்பட்டுவரும்,  பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் தாய் பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் .

“தனது மகன் எந்த தப்பும் செய்யவில்லை” என்று உறுதியாக குறிப்பிட்டுள்ளார். 

குறித்த பேட்டியில் திருநாவுக்காரசின் தாயார் கூறுவதாவது,

என் மகன் காரில் விபத்துக்குள்ளாகி தலையில் அடிப்பட்டு 3 மாதங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தான். நானே அவனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டேன்.

“நான் ஒன்னும் தப்பானவ கிடையாது, என் மகனை நான் தப்பானவான வளர்க்கவில்லலை, எல்லோரும் பழிபோட்டு 8 நாட்கள் வைத்து இருந்து அடித்து செல்போனில் வீடியோ ஏத்தி என் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என நினைத்து இதை செய்துள்ளார்கள் என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். 

மேலும் வீடியோவில் இருப்பது அனைத்தும் பொய், என் மகன் வீடியோவில் ஒரு வீடியோவிலாவது இருக்கின்றனா ? பரமகுரு என்பவர் ஆள் வைத்து பணம் கொடுத்து ரோட்டில் திரியும் வேறு ஒரு பெண்ணை கூட்டி வந்து வீடியோவில் பேச வைத்துள்ளார்கள். இது அனைத்துமே பொய்.

எனது உயிருக்கும் என் கணவன் உயிருக்கும் எனது மகளது உயிருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். என் பிள்ளைக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் நானும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை பண்ணிவிடுவேன் ”என தெரிவித்துள்ளார்.

மேலும் இது அரசியல்வாதிகளில் சதியாக இருக்கும் என திருநாவுக்கரசின் அம்மா பேட்டியளித்துள்ளமை அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47