மக்களவை தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்குச் செல்லவுள்ளார்.

இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இன்று ராகுல் காந்தியை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாவட்டமாக, ஊர்வலமாக சென்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று ராகுலை சந்தித்து தமது மகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த கோரிக்கையை முன்வைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.