இந்திய திரைப்பட நடிகர் விவேக்  மட்டக்களப்பு காந்தி பூங்கா மற்றும் மட்டு மாநகரசபைக்கு  இன்று புதன்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

மட்டக்களப்பில் நேற்றைய முன்தினம்  நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 125 ஆவது ஆண்டு விழாவிற்கு கலந்துகொண்ட நடிகர் விவேக்கை மாநகரசபக்கு வருமாறு மேயர் தி. சரவணபாவனின் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மட்டு நகரிலுள்ள காந்தி பூங்காவிற்கு வருகை தந்த நடிகர் விவேககை மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார், மட்டு மாநகரசப  மேயர் ரி.சரவணபவான் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடிகர் விவேக்  அங்கு உள்ள  மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு மலர் மாலை அணிந்து மரியாதை செலுத்தியதையடுத்து தனது வருகைக்கான நினைவாக மரக்கன்றை நாட்டிவைத்தார்.

இதனையடுத்து நீருற்று பூங்காவிலுள்ள சுவாமி விவேகானந்தரின் திருஉருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் மாநகரசபக்கு சென்றார்.