22 ஆவது நாளாகவும் தொடரும் சிலாவத்துறை மக்களின் போராட்டம் 

Published By: Digital Desk 4

13 Mar, 2019 | 10:22 AM
image

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதீக்கப்பட்ட மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் 22 ஆவது நாளாக இன்று புதன் கிழமை தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.

குறித்த மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

யுத்ததின் போது முசலி பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தாங்கள் மீண்டும் முசலி பகுதிக்கு மீள் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் வந்தும் கடற்படையினர் எமது காணிகளை ஆக்கிரமித்திருப்பதால் தாங்களும் எங்களுடன் சேர்ந்த 218 க்கு மேற்பட்ட குடும்பங்களும் மீள் குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் குறித்த முசலி பகுதியில் அதிகலவான அரச காணிகள் இருக்கும் போது தங்களுக்கு சொந்தமான காணி உறுதியுடைய காணிகளை கடற்படை ஆக்கிரமித்து இருப்பது தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் தங்கள் போராட்டம் தொடங்கி ஒரு மாதம் கடக்க போகின்ற நிலையில் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட அரசங்க அதிபரோ எங்களுடைய பிரச்சினை தொடர்பாக எங்களை சந்திக்கவோ கேட்டறியவோ இல்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

218 குடும்பங்களுக்குச் சொந்தமான 35 ஏக்கர் நிலப்பரப்பை கடற்படையினர் சுவீகரித்துள்ளதோடு,கடற்படை முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பாதீக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி  சிலாவத்துறை கடற்படை முகாமுக்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த போராட்டம் தொடர்ச்தும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56