இன்றைய திகதியில் நாற்பது வயதை நெருங்குவதற்குள் எம்மில் ஆண் மற்றும் பெண் என அனைவருக்கும் இரத்த அழுத்த பாதிப்பு வந்துவிடுகிறது.

முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், நாம் வாழும் வாழ்க்கை முறையாலும், மாற்றி அமைத்துக் கொண்ட உணவு முறையாலும் இரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகிறோம். இது குறித்து வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை கொடுக்கும்போது நாம் அதை அலட்சியப் படுத்துகிறோம். 

அவர்கள் மன உழைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம், உடல் உழைப்புக்கு கொடுக்காததால் இரத்த அழுத்த பாதிப்பு உருவாகிறது என்கிறார்கள். அதிலும் எம்மில் பலருக்கு குறைந்த இரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் என இரண்டு வகையான இரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இதற்கு வைத்தியர்கள் உணவு முறையின் மூலமும். வாழ்க்கை நடைமுறையில் மூலமும் சில ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள். அண்மைய ஆய்வின்படி மதிய உறக்கம் அதாவது மதிய உணவு உண்டபின் அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலம் ஒரு குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைவதாக கண்டறிந்திருக்கிறார்கள். 

எனவே இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் வைத்துக் கொள்ள நல்லதொரு வழியையும் வைத்திய நிபுணர்கள் காட்டியிருக்கிறார்கள். நாம் இதனையும் பயன்படுத்தி, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, ஆரோக்கியமாக வாழ முயற்சிப்போம்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா