(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

51 நாள் அரசியல் சூழ்ச்சி காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அந்த நிலைமையை தற்போது நாங்கள் மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, எதிர்காலத்தில் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த சகல முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின்  ஆறாவது நாளும் இறுதிநாளுமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நுண்கடன் மாபியாவை ஏற்படுத்தியவர்கள் இன்று அதுதொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

அத்துடன் கடந்த காலத்தில் இருந்த வெள்ளைவேன்கள் ஊடான  கடத்தல்கள் இல்லாமலாக்கி தமிழ் முஸ்லிம் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதன் மூலம் ஜ.எஸ்.பி.சலுகையை பெற்றுக்கொள்ள முடிந்தது என்றார்.