(எம்.எப்.எம்.பஸீர்)

மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 பேருக்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த கோவொறொன்டோ நீதிப் பேராணை மனு, முறைப்பாட்டாளர்களால் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

இது குறித்த மனு இன்று மேன்முறையீட்டு மன்றின் நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே மனுதாரர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இம்மனு வாபஸ் பெற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அதனை ஏற்றே நீதிமன்றம் அம்மனுவை வாபஸ் பெற அனுமதியளித்தது. 

கடந்த 2018 ஒக்டோபர் மாதம், ஜனாதிபதியினால் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் 48 பேர் அடங்களான அமைச்சரவை உறுப்பினர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு சட்டபூர்வ உரிமை இல்லை என அறிவித்து அவர்களை பதவியிலிருந்து நீக்குமாறு கோரியே கோவொறொன்டோ நீதிப் பேராணை மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.