நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீசரை நடிகர் சூர்யா நாளை வெளியிடுகிறார்.

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், அடுத்ததாக ‘ஹவுஸ் ஓனர் ’என்ற படத்தை இயக்கி இருக்கிறார். 

கிஷோர் , லவ்லின் சந்திரசேகர், ‘பசங்க’ கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் தோழியும், நடிகையுமான விஜி சந்திரசேகரின் மகளான லவ்லின் சந்திரசேகர் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசரை நாளை மாலை 4 மணி அளவில் முன்னணி நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.