உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அடைந்தார்.

அமெரிக்காவின் பிரபல சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அமெரிக்காவைச் சேர்ந்த அணைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

உயிரிழந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் வயது 23 , இவர் 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 

2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவர். 

இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டார். 

சைக்கிள் பந்தயத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வந்த கேட்லினுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் சோதனையாக அமைந்தது.லேசான மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாத இறுதியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். 

இதனால் அவரது நுரையீரல் மற்றும் இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் பந்தயத்தில் இருந்து விலகினார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர் வியாழக்கிழமை மரணம் அடைந்துள்ளார். இத்தகவலை அவரது சகோதரர் கொலின் சமூகவளைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 

கெல்லி கேட்லின் மரணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க சைக்கிள் சங்கம் உறுதி செய்தது. கெல்லி கேட்லின் மறைவுக்கு அமெரிக்க சைக்கிள் பந்தய சங்கத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.