(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

எனது அமைச்சான உயர் கல்விக்கும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒதுக்கீட்டைக்கொண்டு மாணவர்களுக்கு  தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பண இஸ்திரத்தன்மையை எப்போதும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அதற்காக அரசாங்கத்துக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். வெளிநாட்டு ஒதுக்கீடுகள் விடயத்தில் நாங்கள் முறையாக செயற்படவேண்டும். வெளிநாட்டு கடன்களை குறைக்க முடியுமாக இருந்தால் அரசாங்கத்தின் சுமைகளைகளை குறைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்ற இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.