(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி கொண்டு நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே  நாட்டினை நாசமாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

தேசிய உற்பத்திகளை வீழ்த்தி, சர்வதேச முதலீடுகளை தடுத்து ஆசியாவின் கீழ்மட்ட நாடக  இலங்கையை மாற்றியுள்ள நிலையில் இனியும் இந்த ஆட்சிக்கு இடமளிக்க முடியாது.

ஆகவே ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து புதிய ஆட்சிக்கு உதவுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது மேலும் தெரிவித்தார்.