நாடளாவிய ரீதியல் நாளை ஆசிரியர் சேவை சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளது. 

ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசரியர் சேவை சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன. 

அதேவேளை நாட்டின் பிரதான நகரங்களில் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்த உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.