உலகிலேயே வயதான பெண்

By Daya

12 Mar, 2019 | 04:12 PM
image

 உலகின் அதிக வயதான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஜப்பானிய பெண் தனதாக்கி கொண்டுள்ளார். 

ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான கேன் தனாகா கடந்த சனிக்கிழமை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

 

ஜப்பானில் புகுவோயா பகுதியைில் 1903 ஜனவரி 2ஆம் திகதி பிறந்துள்ளார். 

குறித்த பெண் 1922 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். 

இதற்கு முன்னர் ஜப்பானை சேர்ந்த 117 ஜலியோ மியாகொக்  என்ற பெண்ணே கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருந்தார் குறித்த பெண்ணின் மறைவுக்கு பிறகு  கேன் தனாகாவுக்கு கிடைதுள்ளது.

கேன் தனாகா  வயது எப்படியிருந்தாலும் குறித்த பெண் தன்னுடைய வாழ்நாளில் கணிதம் மற்றும் இலக்கிய பாடங்களை கற்றுக்கொள்ள முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

வயதான பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,

குறித்த பெண் வாழ்நாளில் மகிழ்ச்சியாக இருந்த நாள் உலக கின்னஸ் சாதனை கிடைத்த நாள் தான்  என தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right