பெயரை மாற்றி அமைத்த ஆப்பிள் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி : ஏன் தெரியுமா?

Published By: Digital Desk 3

12 Mar, 2019 | 03:06 PM
image

ஆப்பிள் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி 'டிம் குக்' தன்னுடைய பெயரில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். 

கடந்த வாரம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கச்செய்த ஆப்பிள் நிறுவனத்துக்கு அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், ஆப்பிள் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி பெயரை 'டிம் குக்' என்று சொல்லாமல் 'டிம் ஆப்பிள்' என்று தவறுதலாக கூறிவிட்டார். 

அதனை அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை. ஆனால் இணையவாசிகள் இதனை உற்றுக்கவனித்து கிண்டல் செய்து மீம்களை அள்ளி வீசத்தொடங்கிவிட்டனர். ஆப்பிள் நிறுவனத்தலைவர் 'டிம் ஆப்பிள்' என்றால் பேஸ்புக் ஓனரான மார்க் பெயர் என்ன? 'மார்க் பேஸ்புக்கா'? என்று கேள்வி எழுப்பத்தொடங்கினர்.

இந்தச் சமூக வலைத்தள கிண்டல் பதிவுகளை கவனித்த ஆப்பிள் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பெயருடன் ஆப்பிள் லோகோ வரும் படி மாற்றி அமைத்துவிட்டார். தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தின் பெயரில் டிம் உடன் சேர்த்து ஆப்பிள் லோகோவும் வருகிறது. இந்த லோகோ ஆப்பிள் நிறுவனங்களைச் சேர்ந்த தயாரிப்புகளில் மட்டுமே தெரியும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

 மற்ற தயாரிப்புகளில் வெறும் சதுர கட்டமாக மட்டுமே தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26