இலங்கைக்கு கடத்துவதற்க்காக தனுஸ்கோடி  கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த ரூபா 20 இலட்சம் மதிபுள்ள கேரளா கஞ்சா தனி பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது,கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

   இராமேஸ்வரம் அடுத்த தனுஸ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில்  அருகே இலங்கைக்கு கேரளா  கஞ்சா கடத்த இருப்பதாக எஸ்.பி. தனி பிரிவு மற்றும்  கீயூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்து, இதனையடுத்து தனுஸ்கோடி பழைய துறைமுகம்  கடற்கரை பகுதிகளில் பொலிஸார்  தீவிர சோதணை நடத்தினர். 

இதன் போது  சந்தேகத்திற்க்கு இடமாக முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சாக்கு மூடைகளை கைபற்றி சோதனை செய்ததில் அதில்  பதினைந்து கஞ்சா பொட்டலங்களில் சுமார் முப்பது கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

 பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்ற பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி சென்றதால் அவர்கள் குறித்து பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின்  பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக   மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.