(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டின் விரைவான அபிவிருத்திகளுக்கு இருக்கும் தடைகளை இல்லாமலாக்க கட்சி பேதமின்றி செயற்படவேண்டும்.  இல்லாவிட்டால் அபிவிருத்திக்காக செலவிடப்படும் தொகை போதாமல்போய் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் என்ன தெரிவித்தாலும் எமது கொள்கையை நாங்கள் கடைப்பிடித்துக்கொண்டு செல்லவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான  வரவுசெலவுத்திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் ஆறாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.