மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்பாவனையாளர்களிடம் கேட்டுகொள்வதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேட்டுகொண்டுள்ளார். 

மின்சார உற்பத்தி பகுதிகளில் உள்ள நீர்தேக்கத்தில் நீர் மட்டம் தற்பொழுது நாளாந்தம் குறைந்து வருகின்றது. 

இதன் காரணமாக அனல் மின் நிலையங்களை பயன்படுத்தப்படுவதாக மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த நிலைமையின் காரணமாக அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கோ அல்லது மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளன.  

இந்த நிலைமையை புரிந்துகொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்பாவனையாளர்களிடம் கேட்டுகொள்வதாக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க கேட்டுகொண்டுள்ளார்.