ஹட்டன் புகையிரத நிலையத்தில் உள்ள கழிவரைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது பிரதான வழிபாதையினூடாக செல்வதனால் அங்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் மற்றும் பாதசாரிகள்,பாடசாலை மாணவர்கள் வெளிநாட்டு உல்லாச பயணிகள் ஆகியோர் புகார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் புகையிரத நிலையத்தில் காணப்படும் கழிவரையின் கழிவு நீர் வெளியேறும் குழியானது நிரம்பியதன் காரணமாக அவ்வீதியில் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.

ஹட்டன் நகரில் இருந்து மேம்பாலம் ஊடாக புகையிரத நிலையம் மற்றும் பொலிஸ் நிலையம் பாடசாலை செல்லும் வீதியிலேயே இவ்வாறான நிலை தேன்றியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

புகையிரத நிலையத்திலிருந்து நகருக்கு செல்லும் குறுக்கு வழி பாதையாக சகலரும் பயன்படுத்தும் மேம்பாலமாகவும் தற்போது அதிகளவான சிவனொளிபாதமலை யாத்திரிகள் வந்து செல்லும் இடமாகவும் காணப்படுகின்றது.

இது விடயமாக புகையிரத நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது இங்கு வரும் அனைவரிடமிருந்தும் இது தொடர்பில் அதிகளவான முறைபாடுகள் கிடைக்கபெற்றுள்ளது இருப்பினும் இது தொடர்பில் நாம் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் பயனில்லை என கூறியதுடன் வெகு விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுதருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.