கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து, விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை வழங்குவதற்காக காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கான கால வரையறை இந்த மாதம் 14 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றுக் கூடிய குறித்த ஆணைக்குழுவில் மேலும் 3 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு உயர் தர மாணவர்களுக்கு டெப் கருவிகள் வழங்குவதில் பாரிய ஊழல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் அந்த முறைப்பாடுகளுக்குள் உள்ளடங்குகிறது