கிழக்கு கடற்படையினரால் சட்ட விரோதமான மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ன என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்படையினரால் நேற்று திருகோணமலை வெருகல் கடற்பகுதியில் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது 180 அடி நீளமான தடைச்செய்யப்பட்டுள்ள மீன்பிடி வலையொன்று மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் மீன்பிடி வலைகளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் மீன்வள ஆராச்சி நிலையத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.